நடிகர்கள் கைவிட்டதால் விரக்தியில் நந்திதா

நந்திதா, தினேசுடன் நடித்திருந்த 'அட்டகத்தி' அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதனைத் தொடர்ந்து அவர் 'வி' என்று ஆரம்பிக்கும் நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வந்தார். படங்கள் வெற்றி பெற்றன. தற்பொழுது விஜய் சேதுபதி, விஷ்ணு ஆகியோர் அவரைப் புறக்கணிப்பதால் விரக்தியில் இருக்கிறாராம் நந்திதா. தினேசுடன் நடித்த 'அட்டகத்தி', சிவகார்த்திகேயனுடன் நடித்த 'எதிர் நீச்சல்' போன்ற படங்கள் நந்திதாவுக்குக் கொடுத்த வெற்றிதான் அவரைக் கோலிவுட்டில் நிலைநிறுத்தியது.

அதன்பிறகு 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களும் வெற்றி பெற்றன. அதனால் விஜய் சேதுபதி, விஷ்ணு போன்ற 'வி' எழுத்தில் பெயர்களைக்கொண்ட நடிகர்களின் படம் என்றாலே தனக்கு ராசிதான் என்று விழாக்களில் உரக்க குரல் கொடுத்து வந்தார் நந்திதா. ஆனால், இப்போது அவர் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த அந்த 'வி' நடிகர்கள் யாருமே நந்திதாவைக் கண்டுகொள்வதில்லையாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!