கிசுகிசுக்கப்பட்டதால் வாய்ப்புகளை இழந்தார்

தெலுங்கில் சில படங்களில் கண்ணுக்கே தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் ஆனந்தி. ‘கயல்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். தொடர்ந்து ‘சண்டிவீரன்’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ போன்ற படங்களில் நடித்தவர் ஒரு கட்டத்தில் ஜி.வி.பிரகாஷ் படங்களில் மட்டும்தான் நடிப்பார் என்ற நிலை உருவானது. ஆனந்தி கையில் இப்போது தமிழில் இரண்டு படங்கள்தான். அந்த இரண்டு படங்களும் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டன. ஜி.வி.பிரகா‌ஷுடன் இரண்டு படங்களில் தொடர்ந்து மிகவும் நெருக்கமாக நடித்ததால் இருவரையும் இணைத்து கிசுகிசுக்கிறது கோலிவுட். அதனால் மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்து வருகிறார் ‘கயல்’ ஆனந்தி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘பிகில்’ படத்தில் நடித்து முடித்ததும் கால்பந்து தொடர்பான அனைத்தும் அத்துபடியாகிவிட்டது,” என்கிறார் வர்ஷா.

12 Nov 2019

விஜய்யை ரசித்த வர்ஷா

‘’இருட்டு’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

12 Nov 2019

துரை: என்னை பிரமிக்கவைத்தார் சுந்தர்.சி

தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நாயகி ராஷ்மிகா. படம்: ஊடகம்

11 Nov 2019

ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை