செல்லாத நோட்டு; தமிழக கோயில் உண்டியல்கள் நிரம்புகின்றன

பழநி: ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறி விக்கப்பட்டதால் பழைய நோட்டு களை வைத்து செய்வதறியாது தவிக்கும் பலர் கோயில் உண் டியலை நிரப்பி வருகின்றனர். இந்த வகையில் பழநி மலைக் கோயில் உண்டியல் மூன்று நாட் களில் 25.19 லட்சம் ரூபாய் நிரம்பி விட்டது. நவம்பர் 21ஆம் தேதி பழநி மலைக்கோயில் உண்டியல் எண்ணப்பட்டது. இதில், இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், தங்கம் 57 கிராம், வெள்ளி 6,100 கிராம், ரொக்கம் 25.19 லட்சம் ரூபாய் இருந்தது. சென்னை மயிலாப்பூர் கபாலீ சுவரர் கோயிலிலும் உண்டியல் வசூல் அதிகரித்துள்ளது.

கோயில் உண்டியல்களில் பக்தர்கள் போட்ட காணிக்கைகளை அதி காரிகளும் தொண்டர்களும் எண்ணுகின்றனர். படம்: தமிழக ஊடகம்