புதுடெல்லி: திருமணம் என்றால் தலைவாழை இலையில் திருமணச் சாப்பாடும் கைகுலுக்கி வாழ்த்து கூறி மொய்ப்பணம் வைப்பதும் உலகம் எங்கும் வழக்கம்தான். ஆனால் இப்போது திருமணங் களில் மொய்ப்பணம் வைக்க சில்லறைத் தட்டுப்பாடு இருப்பதால் 'ஸ்வைப்' கருவியில் பணத்தை வரவு வைத்து செல்கிறார்கள். வட மாநிலம் ஒன்றில் புதிதாகத் திருமணம் செய்த தம்பதியர் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 'ஸ்வைப்' கருவி யுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வேக மாகப் பரவி வருகிறது.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாததன் காரணத்தால் மக்க ளிடம் அன்றாட செல வுக்கே பணமில்லை. இதனால் திருமண விழாவுக்குச் செல்பவர்கள் பரிசுப் பொருட்களை வாங்கமுடியாமலும் மொய்ப்பணம் அளிக்க முடியா மலும் திணறி வருகின்றனர். இப்படிப் பலவித பிரச்சினை களையும் மீறி திருமணம் நடந் தாலும் விழாவிற்கு வரும் உற வினர்கள், நண்பர்களால் பரிசுப் பொருளைப் பணமாக வழங்க முடியாததால் வட மாநிலம் ஒன்றில் புதிதாகத் திருமணம் செய்த தம்பதியர் 'ஸ்வைப்' கருவியுடன் வரவேற்பில் அமர்ந்து தங்களது மொய்ப்பணத்தை பெற்றுள்ளனர்.
விருந்தாளிகளிடம் இருந்து திருமணத் தம்பதிகள் எந்தவித பிரச்சினையுமின்றி பணம் பெற, தம்பதிகளுக்குக் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை 'ஸ்வைப்' செய்யும் இயந்திரத்தை பரிசாகக்கொடுக்கலாம் என யோசனை கூறி இவர்களின் புகைப்படத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். படம்: ஊடகம்