சிங்கப்பூரில் புதிய ரூபாய் கிடைப்பது சிரமமாகவே உள்ளது

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்லும் பயணிகள் சென்னை, திருச்சி போன்ற விமான நிலையங் களில் மட்டுமே சிங்கப்பூர் டாலர் களை இந்திய ரூபாய்களாக மாற்ற முடியும் என்றார் முஸ்தஃபா நாணய மாற்று நிறுவனத்தின் நிர்வாகி திரு ஜமாலுதின் நசிர். புது ரூபாய் நோட்டுகள் சிங்கப் பூருக்கு இன்னும் வராத காரணத் தால் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளிடம் பெறப்படும் புது ரூபாய் நோட்டுகளே தற்போது வியாபாரத்துக்கு ஓரளவு கை கொடுப்பதாக அவர் கூறினார்.

“சிங்கப்பூர் டாலர்களுக்காக எங்களிடம் வரும் இந்தியச் சுற்றுப் பயணிகளிடமிருந்து புது நோட்டு களை வாங்குகிறோம். எல்லாமே 2000 ரூபாய் நோட்டுகளாகத்தான் வருகின்றன. அதுவும் ஒரு சில மணி நேரங்களில் விற்று விடுவ தால் புது நோட்டுகள் இருப்பில் இருப்பதில்லை,” என்றார் அவர். டிசம்பர் மாதத்தில் இந்தியா செல்லும் பலருக்குப் புது நோட்டு களைத் தர முடியாததால் வியா பாரம் கிட்டத்தட்ட 20% வரை நட்டத்தை எதிர்கொள்கிறது என்றார் அவர். இதே சூழலில் உள்ள ‘ஸ்டெர்லிங் எக்ஸ்சேஞ்ச்’ நாணய மாற்று நிறுவனத்தின் உரிமையாளர் திரு சையது முபாரக், 49, பழைய நோட்டுகள் வாங்குவதை நிறுத்தி விட்டதாகக் கூறினார்.

முஸ்தபா நாணய மாற்று நிறுவனத்தில் நாணயம் மாற்ற வரிசை பிடித்து நிற்கும் மக்கள். படம்: திமத்தி டேவிட்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

19 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்