தி நியூ பேப்பர் பெருநடையில் 5,000 பேர்

மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று தி நியூ பேப்பர், ‘கோர்ட்ஸ்’ பெருநடையில் 5,000 பேர் கலந்து கொண்டார்கள். பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய அந்த 5 கிலோமீட்டர் தூர நடை யில் கலந்துகொண்டவர்கள் விலங்கியல் தோட்டத்தில் உள்ள புதிய ஆமெங் குரங்கு, நேகா யானைக்குட்டி உள்ளிட்ட பல விலங்குகளைக் கண்டு மகிழ்ந்த னர். விலங்கியல் தோட்டம், நைட் சஃபாரியை உள்ளடக்கி அந்தப் பெருநடை நடந்தது. இடையில் மழை பெய்தது என்றாலும் யாருக்கும் அதனால் ஊக்கம் குறையவில்லை. சிலர் குடைபிடித்துக் கொண்டனர். சிலர் மழையில் நனைந்தபடியே நடந்தனர். தி நியூ பேப்பர், மை பேப்பருடன் இணைந்து புதுப் பொலிவுடன் டிசம்பர் முதல் வாசகர்களுக்கு இலவசமாகக் கிடைக்கவுள்ளது. என்றாலும் இந்த இணைப்புக்குப் பிறகும் இந்தப் பெருநடை மரபு தொடரும் என்று தி நியூ பேப்பர் ஆசிரியர் டொமினிக் நாதன் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வாண்டின் டிஎன்பி பெருநடை விலங்கியல் தோட்டத்திலும் நைட் சஃபாரியிலும் நடைபெற்றது பங்கேற்பாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. படம்: தி நியூ பேப்பர்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது