புத்தாக்கம், நேர்த்தி, பொது அறிவுத்திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றைச் சோதிக்கும் 'கேட்வாக்', கேள்வி-பதில் அங் கங்களில் தம்முடன் இறுதிச் சுற்றில் போட்டியிட்ட ஒன்பது போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி 'வசந்தம் தீபாவளி சேலை அழகுராணி 2016' பட்டத்தை வென்றார் யுவனீஸ்வரி பத்மநாதன். அவருக்கு $2,000 ரொக்கப் பரிசுடன் 'அப்போலோ செல்லப் பாஸ் கலர் புத்திக்'கின் சேலையும் பரிசாக வழங்கப்பட்டது. சென்ற வியாழக்கிழமை அப்போலோ பிஸ்ட்ரோவில் நடத் தப்பட்ட இறுதிச் சுற்று போட்டியை 'ஒலி 96.8' படைப்பாளர் ஆனந்த், 'மிஸ் வசந்தம் 2011' போட்டியின் வெற்றியாளர் விமலா வேலு ஆகியோர் வழிநடத்தினர். ஏ.இளவரசி இரண்டாம் இடத்தையும் நூர்ஹனிதா அப்துல் அஸிஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
சென்ற மாதம் தொடங்கிய 'வசந்தம் தீபாவளி சேலை அழகுராணி' போட்டியின் இறுதிச் சுற்று, கடந்த வியாழக்கிழமை 'அப்போலோ பிஸ்ட்ரோ'வில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் வெற்றிபெற்ற யுவனீஸ்வரி பத்மநாதன் (நடுவில்), முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைக் கைப்பற்றிய ஏ.இளவரசி (இடது), நூர்ஹனிதா அப்துல் அஸிஸ். படம்: மீடியாகார்ப்