இந்தியா அபாரப் பந்துவீச்சு

மொகாலி: இங்கிலாந்துக்கு எதி ராக நேற்று நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா அபாரமாகப் பந்துவீசி எதிரணியின் ஓட்ட எண்ணிக்கைகைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டது. இந்தியப் பந்துவீச்சாளர்களின் அதிரடி ஆட்டத்தினால் இங்கி லாந்து அதன் முதன் இன்னிங்சில் 90 ஓவர்களில் எட்டு விக்கெட் டுகளை இழந்து 268 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக ஜானி பேர்ஸ் டோவ் 89 ஓட்டங்களை எடுத்தார். அவரது விக்கெட்டை ஜெயந்த் யாதவ் சாய்த்தார். இங்கிலாந்தின் முதல் இன்னிங் சைத் தொடங்கி வைத்த அணித் தலைவர் அலெஸ்டர் குக் 27 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை ஆட்டமிழக்கச் செய்தார். அதனைத் தொடர்ந்து கள மிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.

டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கும் இந்தியா மூன்றாவது டெஸ்ட்டில் அதன் அபாரப் பந்துவீச்சை வெளிப் படுத்தியது. 89 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவின் விக்கெட்டைச் சாய்த்துக் கொண்டாடும் இந்திய வீரர்கள். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!