பகலில் ஆட்டோ ஓட்டுவார்... இரவில் திருடுவார்

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையடித்த புகாரின் பேரில் அண்ணாமலை, 45, (படம்) என் னும் ஆட்டோ ஓட்டுநர் கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் போலிசார் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாயின. அய்யப்பன்தாங்கல் பகுதியில் வசித்து வரும் அண்ணாமலை இதற்கு முன்பு எம்ஜிஆர் நகரில் குடி இருந்தார். அப்போது வசதிபடைத்த பல்வேறு வீடுகள், கடைகள் மீது இவர் ஒரு கண் வைத்திருந்தார்.

பகல் முழுவதும் ஆட்டோ ஓட்டும் அவர், இரவில் திருடப்போகும் இடங்களைக் குறிவைப்பார். பின்னர் அந்த இடங்களில் பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு மறு நாள் ஒன்றும் தெரியாததுபோல ஆட்டோ ஓட்டுவார். ஆனால், கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலை எம்ஜிஆர் நகரிலுள்ள ரொட்டிக் கடை ஒன் றினுள் புகுந்து 20,000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் 3,000 பெறுமான உணவுப் பொருட்களை யும் அண்ணாமலை கொள்ளை யடித்ததை அவரது ஆட்டோவே காட்டிக்கொடுத்தது. கொள்ளை பற்றி புலன் விசா ரணை நடத்தி வந்த அதிகாரிகள் ரொட்டிக் கடை வெளியே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி களை ஆய்வு செய்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!