தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. எதிர்பார்த்தது போலவே மூன்று தொகுதிகளி லும் அதிமுக வெற்றி பெற்ற போதிலும் அக்கட்சிக்கு முழு திருப்தி கிட்டவில்லை. மூன்று தொகுதிகளில் திருப் பரங்குன்றத்தை ஒரு சவாலாக எடுத்து தேர்தலைச் சந்தித்தது அதிமுக. காரணம், திமுக சார் பில் நிறுத்தப்பட்ட சரவணன் தொகுதியில் நன்கு அறிமுகம் இல்லாதவர். மேலும், பணபலம் குன்றியவர். ஆனால், அவரை எதிர்த்து அதிமுக களம் இறக்கிய ஏ.கே. போஸ் ஏற்கெனவே இத்தொகுதி யில் வென்றவர். எனவே, குறைந்தபட்சம் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்தனர் அதிமுகவினர்.
முதல்வர் பொறுப்பில் இருக் கும் ஓ.பன்னீர்செல்வமே முன் னின்று வேலைகளில் ஈடுபட் டார். வாக்காளர் ஒவ்வொரு வருக்கும் 2,000 ரூபாய் கொடுக்கப்பட்டதாகக் கூறப் பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவில் 42,000 வாக்குகளையே ஏ.கே. போஸ் அதிகமாகப் பெற்றார். அதனால், வெறுப்படைந்த அதிமுக தரப்பு வாக்களிக்காதவர்களை அடை யாளம் காணத் தொடங்கியது.