வில்சன் சைலஸ்
சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் மேலும் பல வசதி குறைந்த இந்திய குடும்பங்களுக்கு உதவிக் கரம் நீட்டவுள்ளது. இனிமேல் $650க்கு மேல் தனிநபர் வருமானம் கொண்ட இந்திய குடும்பங்களும் சிண்டா வின் குடும்ப ஆதரவுத் திட்டங் களால் பலன் பெறமுடியும். இருப்பினும், இவர்கள் $1,000க் கும் குறைவான தனிநபர் வரு மானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண் டும்.
இவர்கள் சிண்டாவின் திட்டங் களில் பங்கேற்க மிகச் சிறிய தொகையைக் கட்டினால் போதும். இத்துடன், $650க்குக் குறை வான தனிநபர் வருமானம் பெறும் குடும்பங்கள் அடுத்த ஆண்டு முதல் சிண்டாவின் திட்டங்களில் கலந்துகொள்ள எந்தக் கட்டண மும் செலுத்த வேண்டியதில்லை. ஒவ்வோர் ஆண்டும் சிண்டா வின் திட்டங்களால் கிட்டத்தட்ட 20,000 பேர் பயன் அடைகிறார்கள். புதிய மேம்பாட்டால் அவர்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர், அதாவது 14,000 பேர் நன்மை அடைவார்கள் என்று சிண்டா தெரிவித்தது.
(இடமிருந்து) சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி கே.பரதன், சிண்டா வாழ்நாள் அறங்காவலர் எஸ். தனபாலன், கல்வியில் மேம்படுவதற் கான உதவிகளைப் பெற்ற 1,200 மாணவர்களுள் ஒருவரான சி.சங்கரி. படம்: திமத்தி டேவிட்