புதிய ரூ.500க்கு தட்டுப்பாடு

சென்னை: ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு புதிய ரூ. 2000, ரூ. 500 நோட்டுகள் வெளியிடப் பட்டன. இதில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் சில நாட்களுக்கு முன்புதான் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன. ஆனால் இந்தப் புதிய 500 ரூபாய் நோட்டுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் காரணங்களால் புதிய 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் விநியோகிக்க காலதாமதம் ஏற் பட்டது. இதனால் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே விநி யோகிக்கப்பட்டன. ஆனால் 100 ரூபாய் நோட்டுகளும் தீர்ந்து விட் டதால் பல ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படவில்லை.

பின்னர் ரூ. 2000 அறி முகப்படுத்தப்பட்டு ஏடிஎம் இயந்திரங்கள் வழி விநியோகிக்கப் பட்டன. ஆனால் ரூ. 2000 நோட்டின் மதிப்பு அதிகமாக சில் லறை மாற்றுவதில் சிக்கல் ஏற் பட்டது. இதற்கிடையே புதிய ரூ. 500 நோட்டின் வரவால் பணத் தட்டுப் பாட்டுக்குத் தீர்வு ஏற்படும் என்று நம்பிய பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!