ஜூரோங் ஏரி தோட்டங்களின் மத்திய, கிழக்குப் பகுதிகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அந்தத் திட்டங்களின்படி தனிச்சிறப்பு மிக்க வெப்பமண்டல தாவரங்களு டன் கூடிய தோட்டங்களும் சமூகப் பொழுதுபோக்கு இடங்களும் அமைக்கப்படும். ஜூரோங் மக்கள் அனுபவிக்க ஏதுவாக குட்டைகள், படிக்கட்டு நீர்வீழ்ச்சிகள், ஓடைகள் ஆகிய வற்றுடன் கூடிய நீர்நிலை தோட் டங்கள் உருவாக்கப்படும். அந்தத் திட்டங்கள் பற்றி தங்கள் கருத்துகளைப் பொதுமக் கள் தெரியப்படுத்தும் விதமாக ஜூரோங் ஈஸ்ட்டில் Canopy @ J Linkல் ஒரு கண்காட்சி நடக்கிறது.
அதில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், ஜூரோங் ஏரி தோட்டங்களுக்கான திட்டங்களை அறிவித்தார். அத்திட்டங்கள், சாப்பிடக்கூடிய காய்கறி பழத்தோட்டம், தொங்கும் தோட்டம் போன்ற சீரிய கோட்பாடு களையும் கொண்டிருக்கும். இந்தக் காய்கறி பழத்தோட்டத் தில் விளையும் காய்கறிகளும் பழங்களும் ஓர் உணவகத்தில் மக்களுக்கு கொடுக்கப்படும். பார்வையாளர்களை மூன்று பக்கங்களிலும் சூழ்ந்து இருக்கும் 'நீர்ச்சுவர் அரங்கம்' மக்களுக்கு வெப்பத்தைத் தணித்து குளுகுளு சுற்றுச் சூழலை ஏற்படுத்தித்தரும். இந்த அரங்கில் மூன்று மீட்டர் உயரத்துக்கு நீர்வீழ்ச்சி உருவாக் கப்படும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (சிவப்பு உடை) கலாசார, சமூக, இளையர் அமைச்சர் திருவாட்டி கிரேஸ் ஃபூ முதலானோர் ஜூரோங் ஏரி தோட்டங் களுக்கான திட்ட மாதிரியைப் பார்வையிடுகிறர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்