அலெப்போவின் பெரும் பகுதியை சிரியா படை மீட்டது

அலெப்போ: சிரியாவின் அரசாங் கப் படை தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கிழக்கு அலெப்போ பெரிய பகுதி ஒன்றை மீட்டுள் ளது. அலெப்போவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மசகென் ஹனனோ என்னும் இடம் சிரியா அரசுப் படை வசம் கொண்டு வரப்பட்டது. அந்த இடத்தில் இருந்து எதிரிகளைத் தாக்கி விரட்டுவது சிரியாவின் அரசுப் படையினருக்கு எளிதாகியுள்ளது.

அலெப்போவின் கிழக்குப் பகுதியை மீட்பதற்கான நடவடிக் கையை சிரியா நவம்பர் 15ஆம் தேதி முடுக்கிவிட்டது. அச்சமயம் பொதுமக்களில் சுமார் 275,000 பேர் தீவிரவாதிகளால் முற்றுகை யிடப்பட்டிருந்தனர். அப்போது நடந்த சண்டையில் பொது மக்களில் 212 பேர் கொல்லப்பட்டதாக பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்தது. அவர்களில் 27 குழந்தைகள் என்றும் அந்த அமைப்பு ஒன்று தெரிவித்தது. போரில் காயமடைந் தவர்களுக்குப் போதுமான மருத்துவ, உணவு வழங்கீடு இல்லை யெனவும் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!