இந்தோ. குண்டுவெடிப்புச் சதித் திட்டம் முறியடிப்பு

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் உள்ள மியன்மார் தூதரகக் கட்டடம் உள்ளிட்ட பல அரசாங்கக் கட்டடங்களைக் குண்டு வைத்துத் தகர்க்கும் தீவிரவாதிகளின் சதித் திட்டம் போலிசாரால் முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக குண்டு தயாரிப்பவர் ஒருவர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டார். பின்னர் நேற்று நடந்த அதிரடிச் சோத னையில் இந்தத் திட்டத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகப்பேர் வழிகள் மூவரும் ஜமா அன்ஷாருட் டௌலா என்னும் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுவதாக போலிஸ் பேச் சாளர் பாய் ரஃப்லி அமர் கூறினார். இந்த இயக்கம் ஐஎஸ் இயக்கத் துடன் தொடர்புடையது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த வாரத் தொடக்கத்தில் ரியோ பிரியட்னா விபவா என்னும் 23 வயது ஆடவர் ஒருவர், மேற்கு ஜாவாவைச் சேர்ந்த மஜலெங்கா என்னும் இடத்திலுள்ள அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்டார்.

இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதி ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் கருவிகள் போன்றவை பற்றி போலிசார் ஊடகத்தினருக்கு விளக்குகின்றனர். படம்: அந்தாரா ஃபோட்டோ.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள். படம்: ஓமான நாட்டு குடிமைத் தற்காப்பு மற்றும் அவசர சிகிச்சை வாகனப் பிரிவு, காணொளி: PACDAOman

14 Nov 2019

ஆறு இந்திய ஊழியர்கள் மரணம்; ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர்

வெனிஸ் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அந்நகரின் மேயர் லுய்கி பிரக்னாரோ பார்வையிடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

14 Nov 2019

வெனிசில் கடும் மழை; அவசரநிலையை அறிவித்தார் நகர மேயர்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் அருகே புதர்த் தீ வேகமாகப் பரவி வரும் வேளையில், இந்த மாது தமது மகளைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுகிறார். படம்: இபிஏ

14 Nov 2019

புதர்த் தீ: 50க்கும் அதிகமான வீடுகள் சேதம்