ஹவானா: கியூபாவின் புரட்சியாள ரும் அந் நாட் டில் நீண்ட காலம் அதிபராகப் பதவி வகித்தவருமான ஃபிடல் காஸ்ட் ரோ கடந்த வாரம் வெள்ளிக் கிழமை மரண மடைந்தார். அவரது மறைவை யொட்டி அந்நாட்டில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஒன்பது நாளும் அந்நாட்டுக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
மறைந்த 90 வயது தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நல்லுடல், கியூபாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சாண்டியாகோ டி கியூபாவுக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு இன்று முதல் அவரது நல்லுடலுக்கு நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்துவார்கள். 20ஆம் நூற்றாண்டின் முக்கிய மானவராகப் பேசப்பட்ட காஸ்ட்ரோ வின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆனால் அமெரிக்காவின் தேர்ந் தெடுக்கப்பட்ட அதிபர் டோனல்ட் டிரம்ப் மட்டும் காஸ்ட்ரோ ஒரு இரக்கமற்ற சர்வாதிகாரி என்று சாடியுள்ளார்.
கியூபாவின் வால்பரைசோ என்னுமிடத்தில் அந்நாட்டின் புரட்சித் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில் அவரது புகைப்படத்தையும் அவரது புரட்சி வாசகங்களையும் முழங்கியவாறு சென்றனர் அவரது ஆதரவாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ்