குடிமை வட்டாரத்தில் சாலைகளில் நேற்று வாகனங்கள் இல்லை. பதி லாக மக்கள் வாழ்க்கையை ரசிக் கும் வாய்ப்புகள் இருந்தன. காரில்லாத ஞாயிறு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. மக்கள் சாலைகளில் சைக்கி ளோட்டினர். உடற்பயிற்சியில் ஈடு பட்டனர். கால்களில் சக்கரப் பலகைகளில் ஓடினர், ஆடினர், பாடினர். ரிக்ஷா உலா சென்றனர். இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. மக்கள் பெரும் மனமகிழ்ச்சியுடன் திளைத்தனர். சிங்கப்பூரில் சாலைகளில் கார்களைக் குறைத்துக்கொண்டு அதற்குப் பதிலாக வாழ்க்கையை உயிரோட்டமிக்கதாக ஆக்குவ தற்கு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தேசிய வளர்ச்சி அமைச்சர் லாலன்ஸ் வோங் (இடமிருந்து 2வது) சாஸ்கோ மூத்த குடிமக்கள் இல்லத்தில் வசிக்கும் டான் ஜின் கியாட் என்ற 74 வயது முதியவரை சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு நேற்று காரில்லா ஞாயிறு நாளின் ரிக்ஷா உலாவைத் தொடங்கிவைத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்