வடகிழக்கில் ‘என் உணவு எனக்குப் பிடிக்கும்’ இயக்கம்

உணவை வீணடிக்கவேண்டாம் என்று குடியிருப்பாளர்களுக்கு எடுத்துச் சொல்லி உணவு விரய மாவதைத் தவிர்க்கும் நோக்கத் துடன் சிங்கப்பூரின் வடகிழக்கு வட்டாரத்தில் ‘என் உணவு எனக் குப் பிடிக்கும்’ என்ற ஒரு புதிய இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. தேசிய சுற்றுப்புற வாரியம், வட கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத் துடன் சேர்ந்து ‘வடகிழக்கு தூய்மை, பசுமை சிங்கப்பூர்’ என்ற கேளிக்கை நிகழ்ச்சியில் அந்தத் இயக்கத்தைத் தொடங்கியது.

உணவு வீணாவதைத் தொடக் கத்திலேயே குறைக்கும் வகையில் வட கிழக்குப் பகுதி மக்களிடம் அதிக புரிந்துணர்வை ஏற்படுத்து வது இந்த முயற்சியின் இலக்கு. உணவு விரயத்தைக் குறைக்க, தேசிய சுற்றுப்புற வாரியம், தேசிய அளவில் இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறது. அதில் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து செயல் பட்டு சமூகத்தின் தலைமையில் பல நடவடிக்கைகளை வாரியம் எடுத்துவருகிறது.

‘அவர் தெம்பனிஸ் ஹப்’ புதிய கட்டடத் தொகுதியில் உணவு விரயக் குறைப்புக் கூடத்தில் குடியிருப்பாளர் களும் சமூக தோட்டக் கலைஞர்களும் தாவர உரம் அடங்கிய பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டனர். படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

19 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

பானத்தைக் குடித்த திருவாட்டி வாங், அதில் கண்ணாடித் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். படங்கள்: திருவாட்டி வாங்

19 Nov 2019

சிறுவன் குடித்த 'ஸ்மூதி'யில் கண்ணாடித் துகள்கள்; மன்னிப்புக் கோரிய உணவகம்

கணவருடன் சேர்ந்து $191,000 தொகையை மோசடி செய்த லூயிஸ் லாய் பெய் சியனுக்கு சிறைத் தண்டனை. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை ஏமாற்றிய பெண்ணுக்கு 17 மாதச் சிறை