தெம்பனிசில் 'Our Tampines Hub' என்னும் புதிய சமூக, வாழ்க்கை பாணி மையத்தின் முதல் கட்டம் நேற்று பொதுமக்களுக்கு அதிகார பூர்வமாகத் திறந்துவிடப்பட்டது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பல்வேறு சேவைகள் அங்கு இருக் கும். அந்த மையத்தில் முதல்முறை யாக பொது சேவை நிலையம் ஒன்று இடம்பெறுகிறது. அரசாங் கத்தின் வெவ்வேறு ஆறு அமைப்பு களின் சேவைகளை இங்கு ஒரே இடத்தில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அச்சேவை நிலையத்தில் மக்கள் கழகத்தின் வசதிகளைப் பெற பதிவு செய்துகொள்ளலாம். அடைமானத் தொகை, கார்நிறுத்த அபராதத் தொகை போன்ற வீவக தொடர்பான கட்டணங்களைச் அங்குள்ள இணையக் கூடத்தில் செலுத்தலாம்.
ஏராளமான வசதிகளை உள்ளடக்கிய 'நமது தெம்பனிஸ் மையம்'. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்