மொகாலி டெஸ்ட்: இந்தியா நிதான ஆட்டம்

மொகாலி: மொகாலி டெஸ்ட்டின் இரண்டாம் நாளான நேற்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 283 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. இந்தியா தனது முதல் இன்னிங்க்ஸை நிதான மாக ஆடி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மொகாலியில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் விளை யாடிய இங்கிலாந்து அணி நேற் றைய ஆட்டநேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ஓட் டங்கள் எடுத்து இருந்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோவ் 89 ஓட்டங்களும், பட்லர் 49 ஓட் டங்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியது. முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் ஆட்டம் மேலும் 15 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 93.5 ஓவர்களில் 283 ஓட்டங்கள் எடுத்து 'ஆல்அவுட்' ஆனது. ஆண்டர்சன் 13 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் முகமதுஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஜெயந்த் யதவ், ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். அஸ்வினுக்கு ஒரே ஒரு விக்கெட்டுதான் கிடைத்தது.

இந்திய வீரர் அடித்த பந்தைப் பிடிக்கப் பாயும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!