ஐதராபாத்: மத்திய அரசு, அண்மையில் வெளியிட்ட புதிய 2000 ரூபாய் நோட்டை போல அச் சடித்து கள்ளநோட்டுகள் தயாரித்த ஆறு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது குறித்து விவரங்களை காவல்துறையினர் நேற்று வெளி யிட்டனர். "ஐதராபாத் அருகே ராக் கொண்டா காவல்துறை வட்டாரத் துக்கு உட்பட்ட இப்ராகிம் பட்டனம் பகுதியில் சிலர் கள்ள ரூபாய் நோட்டுத் தயாரிப்பதாக தகவல் கிடைத்தது.
இதனால் அந்த வீட்டை சுற்றி வளைத்தோம். "இதில் புதிய 2000 நோட்டு 2 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் ஏனைய சில பழைய ரூபாய் நோட்டுகளும் இருந்தன. மேலும் கள்ள நோட்டு தயாரிக்கும் சாதன மும் சிக்கியது. "இந்த விவகாரம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்," என்று காவல் துறை யினர் கூறினர்.
இதற்கிடையே தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மயிலாடு துறையிலும் கள்ள நோட்டுப் புழக் கத்தில் விடப்பட்டதாகக் கூறப் படுகிறது. இது தொடர்பாகவும் காவல்துறையினர் சிலரைத் தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடையில் ஒருவர் கள்ள நோட்டை மாற்ற வந்தபோது கடை ஊழியர் கண்டு பிடித்தார். ஆனால் நோட்டை மாற்ற வந்தவர் தப்பியோடிவிட்டார். அவருக்கு காவல்துறையினர் வலை வீசியிருக்கின்றனர்.