ஆசியாவிலேயே அடிப்படை வசதிகள், கட்டடங்களில் செய்யப்பட்ட முதலீடுகளிலிருந்து கிடைக்கும் தனிநபர் வருவாயில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கிறது. அதாவது சிங்கப்பூரில் செய்யப்படும் அத்தகைய முதலீடுகளிலிருந்து ஒருவருக்கு கிடைக்கும் வருவாய் ஆசியாவிலேயே ஆக அதிகமாக இருக்கிறது.
ஒரு நாட்டின் பொருளியல் செயல்திறனை அளவிடுவ தற்கு உலகளாவிய கட்டுமான சொத்துச் செயல்திறன் அட்டவணை என்ற ஒரு தரவரிசையும் அறிகுறியாகப் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரில் தனிநபர் வருவாய் US$35,900 ($51,100) ஆக இருக்கிறது. இதில் ஹாங்காங் கிற்கு இரண்டாவது இடம். (US$21,400). ஆர்க்கேடிஸ் எனும் உலகளாவிய வடிவமைப்பு ஆலோசனை நிறுவனம் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம் இந்த விவரங்கள் தெரியவருகின்றன.