சென்னை: எதிர்வரும் உள்ளாட்சித் தேர்லில் குற்றப் பின்னணி உடையவர்களை முன்னிறுத்தக் கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சுற்றிக்கை அனுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தின் பரிந்துரைகளுடன் இத்தேர்தலை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வாய்ப்பு குறைவு என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்தலில் முன்னிறுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்துவது இந்தத் தேர்தலில் சாத்தியமல்ல என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எனினும் இதை ஏற்க மறுத்த நீதிபதி, நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் சில முக்கிய விதிமுறைகளை நிச்சயம் அமல்படுத்த வேண்டும் எனக் கண்டிப்புடன் தெரிவித்தார்.