மதுரை: பிரதமர் மோடியை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்தது தெரியவந் துள்ளது. இதையடுத்து இந்தச் சதிச்செயலுக்கு திட்டமிட்ட மூன்று பேரை மதுரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அல் காய்தா அடிப்படை இயக் கம் என்ற பெயரில் மதுரையில் சிலர் இயங்கி வந்துள்ளனர். இது குறித்து கிடைத்த ரகசியத் தகவ லின் பேரில் போலிசார் அந்த அமைப்பினரைக் கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.
இந்நிலையில் அந்த இயக் கத்தைச் சேர்ந்த மூவர் காவல் துறையிடம் வசமாக சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசார ணையின்போது பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.