மான்செஸ்டர்: இங்கிலாந்து காற்பந்து உலகில் மேன்யூவின் நிர்வாகியாக 26 ஆண்டுகள் தன்னிகரற்ற புள்ளியாக விங்கிய சர் அலெக்ஸ் ஃபெர்குசன் 2013ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற பின் புதிதாக வந்த நிர்வாகிகள் காற்பந்தில் மான்செஸ்டர் யுனை டெட்டை சரிவுப் பாதையில் கொண்டு செல்வதில் புதுப் புது சாதனைகளைப் படைத்து வரு கின்றனர்.
இதன் தொடர்ச்சியாகவே நேற்று அதிகாலை வெஸ்ட்ஹேமை சந்தித்த, தற்பொழுது மொரின்யோ வின் நிர்வாகத்தில் இயங்கும், மான்செஸ்டர் யுனைடெட் குழு கடந்த 36 ஆண்டுகளாக இல்லாத வகையில் தொடர்ச்சியாக நான்கா வது ஆட்டத்தில் சமநிலை கண் டுள்ளது. ஆட்டத்தின் இரண்டா வது நிமிடத்திலேயே வெஸ்ட்ஹேம் குழுவை கோல் போடவிட்டு முன்னிலை பெறவைத்த மேன்யூ பின்னர் போக்பா கொடுத்த பந்தை ஸ்லாட்டான் இப்ராஹிமோவிச் தலையால் முட்டி கோல் போட்ட தால் சமநிலை கண்டது.
மேன்யூ வீரர் பால் போக்பா கீழே வீழ்ந்ததற்கு 'ப்ரீகிக்' கிடையாது என்றும் அவர் வேண்டுமென்றே கீழே விழுந்ததாகவும் கூறி அவருக்கு மஞ்சள் அட்டை காண்பித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து விரக்தியில் மைதான எல்லையிலிருந்த தண்ணீர் போத்தலை காலால் உதைக்கும் மொரின்யோ. படம்: ராய்ட்டர்ஸ்