ரூபாய் மதிப்பு சரிவு தொடரும்: பிரபல வங்கி முன்னுரைப்பு

இவ்வாண்டு இறுதிவாக்கில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய நாணய மதிப்பு 70 ரூபாயைத் தாண்டும் என்று பிரபல ஜெர்மானிய வங்கி 'டாய்ஷ் பேங்க்' கணித்துள்ளது. இந்த நிலை மேலும் தொடரும் என்ற அவ்வங்கி, 2017 இறுதிக்குள் அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 72.50 இந்திய ரூபாய் என்ற நிலையை எட்டும் என்றும் தெரிவித்துள்ளது. பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய அரசாங்கம் அறி வித்தது முதலே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காணத் தொடங்கியது. பங்குச்சந்தையும் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அத்துடன், 2016=17 நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 0.5 விழுக் காடாக இருக்கும் என எதிர் பார்க்கப்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 2017=18 நிதி ஆண்டில் 1.1 விழுக்காடாக உயரும் என்றும் முன்னுரைக்கப் பட்டுள்ளது. பட்டுள்ளது. அதே நேரத்தில், வளர்ந்து வரும் வேறு சில நாடுகளின் நாணயங்களைப் போல இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது அந்நாட்டின் ஏற்றுமதி போட்டித் தன்மையை நிலைத்திருக்கச் செய்ய உதவும் என்றும் கூறப் படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!