தள்ளிப்போனது ‘எஸ் 3’ பட வெளியீடு

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு இன்னும் தீராததால், சூர்யாவின் 'எஸ் 3' திரைப்படம், டிசம்பர் 16ஆம் தேதிக்குப் பதிலாக ஒரு வாரம் தள்ளிப்போய் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகிறது. சூர்யா, அனுஷ்கா, ஷ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'எஸ் 3'. ஹரி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

தணிக்கைக்கு விண்ணப்பிக்க, இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக இப்படம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ரூபாய் நோட்டு பிரச்சினை இன்னும் தீராததால் 'எஸ் 3' வெளியீட்டை டிசம்பர் 23ஆம் தேதிக்கு மாற்றியிருக்கிறார்கள். இதற்கிடையே 'எஸ் 3' படத்தில் தனது பணிகள் முடிவடைந்ததால், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கவனம் செலுத்துகிறாராம் சூர்யா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!