முள்ளமூட்டில் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் `பட்டினப்பாக்கம்'. இதில் கலையரசன் கதாநாயகனாகவும் அனஸ்வரா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சாயாசிங், யோக் ஜே.பி., ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாபு, மதுமிதா, சுவாமி நாதன் உள்பட பலர் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். இஷான்தேவ் இசையமைக்க, வி. அரசு திரைக்கதை, வசனங்களை எழுத, ஜெயதேவ் இயக்கியுள்ளார். இவர் நடிகை பாவனாவின் இளைய சகோதரர்.
"பட்டப்படிப்பை முடித்த கதாநாயக னின் குடும்பம் ஏழ்மையில் தவிக்கிறது. குறுகிய காலத்தில் பெரும் செல்வந்த னாக விருப்பப்படும் நாயகன், குறுக்கு வழியில் பணத்தைச் சம்பாதிக்கத் திட்டம் தீட்டுகிறான். "சிலரைக் குறிவைத்து தீட்டிய திட்டம் திசைமாறி எதிர்பாராவிதமாக நாயகனுக்குப் பெரும் சிக்கலை உண் டாக்குகிறது. இந்தச் சிக்கலில் அவனு டன் சேர்ந்து சிக்கிக்கொண்டவர்களின் கதி என்ன, நாயகன் இந்தப் பிரச்சி னையை எவ்வாறு சமாளித்து வெற்றி காண்கிறான் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சுவாரசியமாகச் சொல்லப்போகிறோம்.
'பட்டினப்பாக்கம்' படத்தின் ஒரு காட்சியில் கலையரசன்.