'பைரவா' படம் வெளியீடு காணவிருக்கும் தைப் பொங்கல் திருநாள் எப்போது வரும்? என விஜய் ர சி க ர் க ள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர் பரதன்.
"இப்படத்தில் விஜய் ஏற்றிருக்கும் பாத்திரம் அவரது திரை வாழ்க்கையின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். கறாரான, அதேசமயம் ஈரமான மனம் கொண்ட கதாபாத்திரம். இதில் அவரது தோற்றம், உடல்மொழி, பேசும் வசனங்கள் என எல்லாமே மக்களைக் கவரும். நகைச்சுவை, ச ண் டை , உ ண ர் வு ப் பூ ர் வ மா ன காட்சிகள் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.