சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம், ஜப்பானில் மியாகி மாநிலத்தில் சிங்கப்பூர் அளித்த நன்கொடையுடன் மீண்டும் கட்டப் பட்ட ஒரு பாலர்பள்ளிக்கு நேற்று சென்றார். அந்தப் பள்ளிக்கூடம் 2011ல் ஜப்பானில் நிகழ்ந்த நில நடுக்கம், சுனாமியால் அழிந்தது.
ஷின்கான்சன் அதிவேக ரயில் மூலம் அந்தப் பள்ளிக்கூடத்திற்குச் சென்ற அதிபர், 'ஷிசிகஹாமா தோயாமா பாலர்பள்ளி' என்ற அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களோடும் பிள்ளைகளோடும் கலந்துரையாடினார்.