மெக்சிகோவைச் சேர்ந்த கலைஞர் கிறிஸ் டியம் ராமோஸ், இறந்த வண்ணத்துப் பூச்சிகளை அழகிய ஓவியங்களாக மாற்றி ஆச்சரியமூட்டுகிறார். இறந்த வண்ணத் துப்பூச்சிகளின் இறக்கைகளில் உருப் பெருக்க கண்ணாடிகளைப் பயன்படுத்தி, புதுப்புது ஓவியங்களை வரைந்து சிறக டிக்கச் செய்கிறார். ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்க 56 மணி நேரங்கள் எடுத்துக்கொண்டாலும் ராமோஸின் கலைப்படைப்புகள் 500ஐ தாண்டிவிட்டன.
இப்படி கலைநயத்துடன் உருவாகி நிற்கும் வண்ணத்துப்பூச்சி ஓவியங்களைக் கொண்டு, கடற்கரையில் பிரம்மாண்ட அருங்காட்சியகத்தை உருவாக்கத் திட்ட மிட்டு வருகிறார். பிரபல ஓவியரான ராமோஸ் உதட்டுச் சாயங்களில் ஓவியம், காய்கறிகளில் ஓவியம், குப்பையில் ஓவியம் என வித்தியாசமான கலைப்படைப்புகளை உருவாக்கி பலமுறை சாதனைகளைப் படைத்துள்ளார்.