மனப் பதற்றத்தை தணிக்க அடிக்கடி கை கழுவுபவர்கள்

யாஸ்மின் பேகம்

மிதமிஞ்சிய மதுப்பழக்கத்திற்கு அடுத்து, சிங்கப்பூரர்கள் அதிகமாக பாதிக்கப்படுவது மனச் சுழற்சி எனும் மனநலப் பிரச்சினையால். சமீபத்தில் 'மனநல கழகம்' வெளியிட்ட ஆய்வு 33 சிங்கப்பூரர்களில் ஒருவர் மனச் சுழற்சியினால் அவதிப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. 'ஒசிடி' (Obsessive compulsive disorder) எனப்படும் மனச் சுழற்சி நோய், பெரியவர்களுடன் சிறுவர்கள், இளையர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது. ஆண்டிற்கு 100 முதல் 200 சிறுவர்களும் இளையர்களும் மன சுழற்சி நோய்க்குச் சிகிச்சை பெற மனநல கழகத்தின் குழந்தைகள் ஆலோசனை மருந்தகத்தை நாடுகின்றனர்.

மனச் சுழற்சி நோய் என்னும் மனநல கோளாறு, ஒருவர் தகவல்களைப் பகுத்தாய்வதில் பிரச்சினைகளை எற்படுத்துகிறது. இதனால் மனபதற்றத்தை ஏற்படுத்தும் எண்ணங்கள், படங்களில் மனம் செல்லும். அதிலிருந்து நிவாரணம் பெற, ஒருவர் தொடர்ந்து மூளையை ஒரே எண்ணத்தில் ஈடுபடுத்தி, ஒரே நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

ஆண்கள் அசுத்தமானவர்கள் என்ற எண்ணம் 10 வயதிலிருந்து ஸ்ருதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மனதில் பதிந்துவிட்டது. இந்த எண்ணத்திற்கு எந்த விதமான பின்னணி காரணமும் இல்லை. ஆண்களுடன் பழகுவதால் தானும் அசுத்தமாகி விடலாம் அல்லது மற்றவர்களுக்கு கிருமி களைப் பரப்பிவிடலாம் என்ற பயம் அவர் மனதில் சிறு வயதிலிருந்து தோன்றிக் கொண்டேயிருந்தது. இதனால் அப்பா, சகோதர்கள், ஆண் நண்பர் களிடமிருந்து விலகிகத் தொடங்கினார் ஸ்ருதி. மனச் சுழற்சி நோயினால் பாதிக்கப்பட்ட ஸ்ருதி, தனது அப்பா, சகோதரர்கள் அருகில் உட்காரமாட்டார். அவர்கள் பயன்படுத்திய தட்டு, அவர்கள் தொட்ட கதவு கைப்பிடிகள், மற்ற பொதுவான பொருட்களை மறந்தும் தொடமாட்டார். அப்பா, சகோதரர்கள் பயன் படுத்திய பிறகு கழிவறையைப் பயன்படுத்தமாட்டார். தான் அசுத்தமாகாமல் இருக்க ஆண்களுடன் பழகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்ருதியிடம் ஆழமாகிக்கொண்டே வந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!