சுதாஸகி ராமன்
பேசி மயக்குபவர்கள், பாடி மயக்குபவர்களைப் போல் வாயினால் ஒலிகளை எழுப்பி மயக்கும் வித்தைக்காரர்களும் உண்டு. அந்த ஜாலவித்தையில் கை தேர்ந்தவராக வளர்ந்து வரும் இளம் கலைஞர் சிங்கப்பூரின் பிரதீபன். 'பீட்பாக்சிங்' எனும் வாய் இசையில் திறன் பெற்று சிங்கப் பூருக்கு அனைத்துலக ரீதியில் பெருமை சேர்த்து வரும் 17 வயது கே. பிரதீபன் இத்துறையில் படிப் படியாக முன்னேறி வருகிறார். தொடக்கநிலையில் பயின்ற போது நண்பர்கள் மூலம் 'பீட்பாக்சிங்' இசைக்கு யூட்டியூப் காணொளிகள் வழி பிரதீபன் அறி முகமானார்.
வாயினால் இசை எழுப்பும் இந்த வித்தையில் ஈர்க்கப்பட்ட பிரதீபன், காணொளிகளில் கலை ஞர்களின் 'பீட்பாக்சிங்' உத்தி களைப் பின்பற்றி தாமும் இசைக்கத் தொடங்கினார். "கைத்தேர்ந்த கலைஞர்கள் பதிவேற்றம் செய்த காணொளி களைக் கண்டு வியந்து அவர்கள் பயன்படுத்திய உத்திகளை பின் பற்ற முயன்றபோது முதலில் கடினமாக இருந்தது. தாளங்களை உருவாக்கத் தெரியாமல் பல முறை துப்பும் சத்தங்களைத்தான் செய்துகொண்டிருந்தேன்," என்று கூறினார் பிரதீபன்.
ஆசிய பீட்பாக்சிங் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து வெற்றி பெற்ற பிரதீபன். படம்: ஆசிய பீட்பாக்ஸ்