லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் நேற்று கண்ணீர் அஞ்சலி செலுத் தினர். அவரது முகத்தை ஒரு முறையேனும் காண வேண்டும் என்பதற்காக பல்வேறு மாவட்டங் களில் இருந்தும் ஆயிரக்கணக் கானோர் சென்னைக்குத் திரண்டு வந்தனர். சென்னை நோக்கி நூற்றுக் கணக்கான வாகனங்கள் வந்த தால் ஆங்காங்கே போக்குவரத்து நிலை குத்தியது. ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழகம் முழுவ தும் சிறு கடைகள், வணிக வளா கங்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. உணவகங்கள் கூட இயங்காததால், நீண்ட தூரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்தவர்கள் வழியில் உண்ண உணவோ, குடிக்க தண்ணீரோ இன்றி பசியும் பட்டினியுமாக பயணம் மேற் கொண்டனர். சில இடங்களில் அதிமுகவினருக்கு அக்கட்சி நிர் வாகிகள் பலர் இலவசமாக உணவுப் பொட்டலங்களை விநியோகித்தனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட அதிமுகவினர் பலர் அதிர்ச்சியில் இறந்துள்ளனர். இதுவரை பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரி ழந்ததாகக் கூறப்படும் நிலையில், மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!