மடகாஸ்கர்: மலேசியாவில் ஈராண்டுகளுக்கு முன்பு மாயமாய் மறைந்த MH370 விமானத்தின் பாகங்களைப் போன்ற சில உடைந்த பாகங்கள் ஆப்பிரிக்க கடலோரப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானப் பயணிகளின் குடும்பத் தினரும் உறவினர்களும் மடகாஸ்கர் நகருக்குச் சென்றுள்ள னர். அந்த கடலோரப் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள உறவினர்கள், கிழக்கு ஆப்பிரிக்க கடலோரப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களையும் விமானப் பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத் துள்ளனர். உடைந்த பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டால் காணாமல் போன அந்த மலேசிய விமானம் என்ன ஆனது என்பது பற்றி அறிந்து கொள்ளமுடியும் என்று மடகஸ்கார் சென்றுள்ள குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார்.
சொந்தமாகவே தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கரான கிப்சன், மடகாஸ்கர் கடலோரப் பகுதியில் கண்டெடுத்த விமானப் பாகத்தை எடுத்துச் செல்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்