எஸ்ஐஏ தலைமை நிர்வாகிக்கு உலகப் புத்தாக்க விருது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் (எஸ்ஐஏ) தலைமை நிர்வாக அதிகாரியான கோ சூன் போங், கடுமைமிக்க போட்டிச் சூழலில் அதிக ஆற்றலுடன் திகழும் வகையில் நிறுவனத்தை உருமாற்றியதற்காக விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு இருக்கிறார். அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு அனைத்துலக புரிந்துணர்வுக்கான தொழில்துறை மன்றம் என்ற லாப நோக்கற்ற ஓர் அமைப்பு செயல்பட்டு வருகிறது. நியூயார்க் நகரில் டிசம்பர் 5ஆம் தேதி நடந்த விருந்து ஒன்றில் 'வைட் டி. இசென்ஹோவர் உலக புத்தாக்க விருது' (Dwight D. Eisenhower Global Innovation Award) என்ற விருது அவருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப நிறுவனத்தை உருமாற்றுவதற்கான தலைமைத்துவ ஆற்றல் நிறைந்த திரு கோ மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக நிறுவனத்திற்கும் அதன் மக்களுக்கும் மேலும் நற்பெயர் கிடைத்து இருக்கிறது என்று அந்த அமைப்பு பாராட்டியது.

நியூயார்க் நகரில் நடந்த அனைத்துலக புரிந்துணர்வுக்கான தொழில்துறை மன்றத்தின் விருந்தில் இடமிருந்து ஸ்டீபன் லீ, ஜேஒய் பிள்ளை, கோ சூன் போங் முதலானோர். படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!