தமிழகத்தின் மூத்த பத்திரிகை யாளரும் 'துக்ளக்' சஞ்சிகையின் ஆசிரியருமான 'சோ' ராமசாமி (படம்) காலமானார். அவருக்கு வயது 82. கடந்த திங்கட்கிழமை உயிரி ழந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராகவும் அரசியல் ஆலோசகரா கவும் திகழ்ந்தார் திரு சோ. உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அதே அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட தாகவும் அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் இவரது உயிர் பிரிந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா இறந்த செய்திகூட இவரிடம் தெரிவிக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டது. ஸ்ரீநிவாச ஐயர் ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 1934ல் சென்னையில் பிறந்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் விவேகானந்தா கல்லூரியில் இளங் கலை அறிவியல் பட்டமும் பின் சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டமும் பெற்றார். இருப்பினும், நாடகத் துறையில் பேரார்வம் கொண்ட இவர், அத் துறையில் தனக்கென ஒரு முத்தி ரையைப் பதித்தார். 'தேன்மொழி யாள்' எனும் நாடகத்தில் நடித்த போது அவர் ஏற்ற கதாபாத்திரத் தின் பெயர் 'சோ'. பின் அதுவே அவரது அடையாளமாக ஆகி விட்டது. இவர் எழுதி இயக்கி நடித்த 'முகம்மது பின் துக்ளக்' நாடகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் திரைத்துறையிலும் அடியெடுத்து வைத்து பெயர் பெற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தார்.