அதிமுகவின் அடுத்த அதிகார மையம்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெய லலிதாவின் மறைவை அடுத்து தமிழகத்தை ஆளும் அதிமுகவின் அடுத்த ஆகப் பெரிய சக்தியாக உருவெடுக்கப் போவது யார் என பெரும் எதிர்பார்ப்புக் கிளம்பி இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக என்றாலே தன் னுடைய முகம் அனைவரின் கண்ணிலும் நிழலாடும்படி செய் திருந்தார் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் இருந்தவரை அவருக்கு இணையாக ஒரு தலைவர் அந்தக் கட்சியில் உருவாகவில்லை. அவர் சொன்னதே இறுதி, உறுதி முடிவாக இருந்தது. அவர் சொல் லுக்குக் கட்டுப்பட்ட மாபெரும் அரசியல் இயக்கமாக அதிமுக திகழ்ந்தது. இந்நிலையில், ஜெயலலிதா வின் மறைவுக்குப் பின் அந்த இயக்கத்தை அவரைப் போன்றே வழிநடத்தி, கட்டிக்காக்கப்போவது யார் எனக் கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியாக இருந்து வந்த சசிகலா அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் என்று இந்திய ஊடகங்களில் யூக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட துயரில் இருந்து அதிமுகவினரும் தமிழக மக்களும் இன்னும் முழுமையாக மீளவில்லை. அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குக் கூட்டம் கூட்டமாகச் சென்று மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்துடன், தம் குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டதாகக் கருதி, துக்க அனுசரிப்புக்கு அடையாளமாக 'அம்மா' நினைவிடத்தில் ஆண், பெண் பேதமின்றி அதிமுகவினர் பலரும் மொட்டையடித்துச் செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!