மும்மடங்கு பெருகிய மின்னிலக்க வர்த்தகம்

புதுடெல்லி: உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் அதனைத் தொடர்ந்து எழுந்த பணத் தட்டுப்பாடும் மின் னிலக்க வர்த்தகத்தை வளர்த்துள் ளன. இணையம் வழி செய்யப்படும் வர்த்தகப் பரிவர்த்தனைகள் கிட்டத் தட்ட 300 விழுக்காடு உயர்ந்துள்ள தாக மத்திய அரசாங்கத்தின் தக வல்கள் தெரிவிக்கின்றன. ஆக்ஸிஜன், பேடிஎம், மோபிக் விக் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்களின் அன்றாட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை ரூபாய் தடை அறிவிக்கப்பட்ட நவ.8ஆம் தேதி வரை 17 லட்சமாக இருந்தது. ஒரு மாதத்திற்குப் பின்னர் இம் மாதம் 7ஆம் தேதி அந்த எண் ணிக்கை 271 விழுக்காடு உயர்ந்து 63 லட்சத்துக்குச் சென்றுள்ளது. இவை பரிவர்த்தனைகளின் எண் ணிக்கை மட்டும்தான். ரூபாய் மதிப்பில் பார்த்தால் நவம்பர் 8ஆம் தேதி 52 கோடி ரூபாயாக இருந்த அன்றாட மின்னிலக்க வர்த்தகம் 267 விழுக் காடு வளர்ந்து கடந்த 7ஆம் தேதி 191 கோடி ரூபாய்க்கு உயர்ந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!