சுஷ்மாவுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை

புதுடெல்லி: வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த மாதம் 7ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். சுஷ்மாவுக்கு 20 ஆண்டு களாக நீரிழிவு நோய் இருந்து வருவதால் அவரது சிறுநீரகச் செயல்பாடு பாதிக்கப்பட்டு இருப் பதாகவும் அவருக்கு 'டயாலிசிஸ்' எனப்படும் ரத்த சுத்திகரிப்பு செய் யப்பட்டு வருவதாகவும் மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கமாக தனது 'டுவிட்டர்' மூலம் மக்களுடன் தொடர்பு வட்டத்தில் இருப்பதை விரும்பும் சுஷ்மா சுவராஜ் (64), "நண்பர்களே, சிறுநீரகம் செயலிழந்ததால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்துள் ளேன். டயாலிசிஸ் (செயற்கை முறை யில் ரத்த சுத்திகரிப்பு) நடந்து வரு கிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. கடவுள் (கிருஷ்ணர்) ஆசீர்வதிப்பார்," என 'டுவிட்' செய்திருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!