புடவையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை. எனக்குப் புடவைக் கட்டிக்கொண்டு நடிக்கத்தான் பிடிக்கும் என்கிறார் காஜல் அகர்வால். நடிகை காஜல் அகர்வால் அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் புடவை அணிந்து வந்து கலந்துகொண்டார். அதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, "அழகு என்பது நடிகைகளுக்கு அவசியம். அதற்காக தன்னை அழகுபடுத்துவதில் முழு நேரத்தையும் செலவிடுவது எனக்குப் பிடிக்காது.
இயற்கையான அழகைக் கொஞ்சம் மெருகேற்றி கவர்ச்சியாகத் தோன்றலாம். "நீச்சல் உடை, 'டீசர்ட்', 'ஜீன்ஸ்' போன்ற ஆடைகளை அணிவதில்தான் கவர்ச்சி இருக்கிறது என்று ஒருசிலர் நினைக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை. சேலை கட்டிக்கொண்டு நடிக்கத்தான் எனக்குப் பிடிக்கும். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சேலை கட்டி வருவதுபோல் ஏதாவது ஒரு காட்சி வையுங்கள் என்று இயக்குநர்களிடம் சொல்லிவிடுவேன்.