சிங்கப்பூர் உருவாக்கிய தெமாசெக் அரிசி

சிங்கப்பூரில் பரிசோதனை மூலம் உருவாக்கப்பட்ட தெமாசெக் அரிசி என்ற சிறப்பு ரக அரசிக்கு பிரதமர் லீ சியன் லூங் ஆதரவு அளித்திருக்கிறார். சிங்கப்பூரில் சோதனைச்சாலை மூலம் விதைநெல் உருவாக்கப்பட்டு பிறகு பயிர்செய்யப்பட்டு விற்கப் படும் ஒரே ஒரு வகை அரிசி தெமாசெக் அரிசி. அந்த அரிசி விற்பனை லியாங் கோர்ட் கடைத் தொகுதியில் இருக்கும் மெய்டி=யா பேரங்காடியில் இந்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கப்பட்டது. ஒரு கிலோ அரிசி $6.95 முதல் $7.45 வரை விற்கப்படுகிறது. இந்த அரிசியை தெமாசெக் டிரஸ்ட் என்ற அமைப்பின் தெமா செக் உயிர் அறிவியல் சோதனைச் சாலை என்ற லாபநோக்கற்ற ஆய்வு நிலையம் உருவாக்கியுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள அந்த சோதனைச்சாலைக்கு நேற்று வருகையளித்த திரு லீ, அங்கு நடைபெறும் ஆய்வுப் பணிகளை தாம் மிகவும் ரசித்ததாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் லீ சியன் லூங், தெமாசெக் உயிர் அறிவியல் சோதனைச்சாலையில் திசு வளர்ப்பு தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்கிறார். விருப்பத்துக்கு ஏற்ப தாவரங்களை உருவாக்கும் வகையில் இடம்பெறக்கூடிய ஆய்வுகளைப் பற்றியும் பிரதமருக்கு விளக்கப்பட்டது. படம்: தொடர்பு தகவல் அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!