நாடுவரை உறவு என்ற ஒரு திராவிடத் தலைவி

இந்தியாவில் பொதுவாழ்வில் ஈடுபட்டுவந்துள்ள தலை வர்களில், கடைசிவரை குடும்பம் என்று வாழ்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் வீடுவரை உறவுமின்றி வீதிவரை மனைவியின்றி காடுவரை பிள்ளையுமின்றி கடைசி வரை நாடு என்றும் நாடுவரை உறவு என்றும் வாழ்ந்த அரசியல் தலைவர்களைக் காண்பது மிக அரிது. அத்தகைய ஓரிரு தலைவர்களில் ஒரு தலைவி தான் செல்வி ஜெயலலிதா.

தனக்கென்று யாருமில்லாத நிலையில், நாட்டையே தன் உறவாக்கிக்கொண்டு, இந்திய அரசியல் வரலாற் றில் ஒரு துருவ நட்சத்திரமாக ஜொலித்த ஜெயலலிதா, ஆண் ஆதிக்கம் அதிகம் உள்ள ஒரு நாட்டில், அவர் களில் பலரைவிட அதிகமாகச் சாதித்துள்ள ஒரு பெண் தலைவியாகப் பார்க்கப்படுகிறார்.

சாதாரண ஒரு நடிகைக்குப் பெண்ணாகப் பிறந்து, தந்தையை இழந்து, படிக்க ஆசைப்பட்டு, ஆனால் நடிப்பில் தள்ளப்பட்டு, பிறகு தாயையும் இழந்து, அடி பட்டு, உதைபட்டு, எதிர்காலம் என்னவென்று தெரியாமல் தவித்த நிலையில், திரைப்படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்து தனக்கு வழிகாட்டியாக இருந்த எம்ஜிஆர் என்ற பிரம்மாண்ட மக்கள் சக்தியை அரவணைத்துக்கொண்டு இனி அரசியல்தான் கதி என்று அந்தத் துறைக்கு வந்த வர் ஜெயலலிதா.

விவரம்: அச்சுப்பிரதியில்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!