நெருக்கடியில் யுனைடெட்

மான்செஸ்டர்: சொந்த ஓல்ட் டிராஃபர்ட் அரங்கில் விளையாடிய கடைசி நான்கு இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களிலும் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு சம நிலை கண்டதால் இன்றிரவு டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு விற்கு எதிராக அங்கு நடக்கவுள்ள ஆட்டத்தில் அக்குழு கட்டாய வெற்றியை எதிர்நோக்கியுள்ளது. பட்டியலில் 27 புள்ளிகளுடன் ஸ்பர்ஸ் ஐந்தாமிடத்திலும் அதை விட ஆறு புள்ளிகள் குறைவாகப் பெற்று யுனைடெட் ஆறாமிடத் திலும் உள்ளன. ஆகையால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இன்னும் மேலேற இரு குழுக்களுமே முனைப்புடன் இருக் கின்றன.

இது குறித்துப் பேசிய யுனை டெட் ஆட்டக்காரர் பால் போக்பா, "ஸ்பர்ஸ் குழுவிற்கு எதிரான ஆட்டம் எவ்வளவு கடினமானது என்பதை அறிவோம். போதாதற்கு சொந்த மண்ணில் நடந்த கடந்த நான்கு போட்டிகளிலும் வெல்லாத தால் இன்றைய ஆட்டத்தில் வென்று பட்டியலில் முன்னேறிச் செல்ல முயல்வோம்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!