நன்கொடை அமைப்புகளுக்கு நிதி திரட்ட நேற்றுக் காலை சிங்கப்பூர் தேசிய கலைக் கூடத்தில் 50க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் கூடி கூட்டு யோகா வகுப்புகளில் கலந்து கொண்டனர். 'ஓம் இஸ் வேர் தி ஹார்ட் இஸ்' (இதயம் இருக்கும் இடத்தில்தான் ஓம் உள்ளது) எனும் தலைப்பில் இந்த நிதி திரட்டு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. கிறுஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சமூக உண்டியல் நடத்திய நிதி திரட்டு நிகழ்ச்சிகளில் இந்த கூட்டு யோகா பயிற்சியும் ஒன்று.
இதுவரை கிட்டத்தட்ட $13,000 நிதி திரட்டப்பட்டுள்ளது. கூட்டு யோகா பயிற்சி மூலம் திரட்டப்பட்ட நிதி அனைத்தும் சமூக உண்டியலுக்குச் செல்லும். சமூக உண்டியலில் கிட்டத்தட்ட 80 நன்கொடை அமைப்புகளுக்கு இந்நிதி உதவும். யோகா மண்டலா, யோகா பிளஸ், யோகா லேப் ஆகிய மூன்று பிரபல யோகா நிலையங் களைச் சேர்ந்த யோகா பயிற்றுவிப்பாளர்கள் சிங்கப்பூர் தேசிய காட்சியகத்தில் நடை பெற்ற மூன்று ஒரு மணி நேர யோகா வகுப்புகளை நடத்தினர்.
சிங்கப்பூர் தேசிய கலைக்கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற யோகா வகுப்பு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்