கடத்தல் கும்பல் தலைவன் துப்பாக்கிச் சூட்டில் பலி

மணிலா: சாபா அருகே மலேசியப் போலிசார் சுட்டுக்கொன்ற மூவரில் ஒருவன் அபு சாயஃப் குழுவின் கடத்தல் பிரிவின் தலைவன் அப்ரகாம் ஹமிட் என்று பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை மலேசிய பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர். அந்த மூவரில் ஒருவன் கடத்தல் பேர்வழியான ஹமிட் என்றும் அவன் கொல்லப்பட்டது அபு சாயஃப் குழுவுக்கு பலத்த அடி என்றும் பிலிப்பீன்ஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மற்ற இருவர் ஹமிட்டின் ஆட்கள் என்றும் அந்த அதிகாரி கூறினர். அபு சாயஃப் குழு, வெளிநாட்டினரைக் கடத்திச் சென்று பணம் பறிப்பதில் ஈடுபட்டு வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!