சோல்: தென்கொரிய அதிபர் பார்க் குவென் ஹைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை வாக்குகளுடன் நிறை வேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அதைக் கொண்டாடி மகிழ்ந்தனர். திருவாட்டி பார்க் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக் காரர்கள் நேற்று சோல் நகரில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத் தில் திருவாட்டி பார்க்கிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தால் திட்டமிடப்பட்ட அந்த ஆர்ப்பாட்டம் கொண்டாட்டப் பேரணியாக மாறியது. மகிழ்ச்சியைக் கொண்டாட ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று சோல் நகர தெருக்களில் ஒன்று கூடிய வேளையில் இன்னும் பலர், அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் குற்றச்சாட்டை எதிர்நோக்க வேண்டும் என்றும் வலியுறுத் தினர். இந்நிலையில் அமைதி காக்குமாறு அந்நாட்டு மக்களை தென்கொரிய பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.