விரைவுச்சாலையில் சுழன்று தடுப்புச் சுவரில் மோதிய கார்

தீவு விரைவுச்சாலையில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சுழன்று சாலையின் தடுப்புச் சுவரில் மோதி யது. இதை ஒரு காணொளி காட்டியது. இரண்டு சுற்று சுற்றிய அந்த வெள்ளை நிற வாகனம் கடைசியில் சாலைத் தடுப்பில் மோதி நின்ற தைச் சாலை பாதுகாப்பு இணை யப் பக்கமான Roads.sg என்ற இணையத்தளத்தில் வெளியான அந்தக் காணொளி காட்டியது. அந்த விரைவுச்சாலையின் இடக்கோடி வாகன நிறுத்திவைப் புத் தடத்தில் அந்தக் காரை அதன் ஓட்டுநர் நிறுத்திவிட்டு அமைதி யாக கீழே இறங்கிச் சென்றதும் அந்தப் படம் மூலம் தெரிந்தது. ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்தக் காணொளி 190,000 தடவைக்கும் மேல் பார்க்கப்பட்டு உள்ளது. காலை 2.05 மணிக்கு அது பதிவேற்றப்பட்டது. இந்தச் சம்பவம் பற்றி அதி காலை 2.30 மணிக்குத் தங்களுக் குத் தகவல் வந்ததாகவும் விசா ரணை நடப்பதாகவும் போலிஸ் தெரிவித்தது.

இரண்டு சுற்று சுற்றி சாலையின் தடுப்புச் சுவரில் மோதி நின்ற கார். படம்: ROADS.SG/ ஃபேஸ்புக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!