பட்ஜெட் 2017: கருத்தறியும் கூடத்தில் துணைப் பிரதமர்

'ரீச்' எனப்படும் அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவு, புதிய 2017 வரவுசெலவுத் திட்டம் பற்றி பொது மக்களின் கருத்துகளைத் திரட்டு வதற்காக பல செவிசாய்ப்புக் கூடங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்தத் தொடரில் முதலாவது செவிசாய்ப்புக் கூடம் ஜங்ஷன் 8ல் நேற்று முன்தினம் செயல்பட்டது. பாசிர் ரிஸ் டிரைவ் 4ல் இருக்கும் புளோக் 440ல் நேற்று இரண்டாவது செவிசாய்ப்பு நிகழ்ச்சி நடந்தது. துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் அதில் கலந்துகொண்டார்.

இதைத் தவிர மரின் பரேட், பாசிர் ரிஸ் வட்டாரங்களிலும் இந்த செவிசாய்ப்பு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. "மக்களுக்கும் அரசாங்கத்திற் கும் இடையில் நம்பிக்கையை நிலைநாட்டி வரவேண்டுமானால் அதற்கு குடிமக்களுக்கும் கொள் கைகளை உருவாக்குவோருக்கும் இடையில் செம்மையான தொடர்பு இருக்க வேண்டியது மிக முக்கிய மான ஒன்று," என்று துணைப் பிரதமர் வலியுறுத்தினார். ரீச் அமைப்பு ஏற்பாடு செய்யும் செவிசாய்ப்புக் கூடங்கள் பொது மக்களை ஈடுபடுத்துவதில் மிக வும் ஆற்றலுடன் திகழ்ந்து வருவ தாக அவர் குறிப்பிட்டார்.

துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், பாசிர் ரிஸ்ஸில் வரவுசெலவுத் திட்டம் 2017க்கு முந்தைய ரீச் எனப்படும் அரசாங்க கருத்தறியும் பிரிவின் செவிசாய்ப்புக் கூடத்திற்கு நேற்று வருகை அளித்தார். படம்: 'ரீச்'

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!