முஹம்மது ஃபைரோஸ்
'பார்கின்சன்ஸ்' எனும் நரம்புத் தளர்ச்சி நோய்க்கு நீண்டகால சிகிச்சை தேவை. சிங்கப்பூரில் மக்கள்தொகை மூப்படைந்து வரும் வேளையில், சுகாதாரப் பராமரிப்பு முறையில் அது குறிப் பிடத்தக்க சவாலாக உள்ளது. சிங்கப்பூரில் முதியவர்களைப் பாதிக்கும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களில் 'பார்கின்சன்ஸ்' நோய் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 50 வயதுக்கு மேற் பட்டவர்களில் ஆயிரத்தில் மூவர் இந்த நோயினால் பாதிக்கப்படு கின்றனர். அடுத்த இருபது ஆண்டுகளில் மக்கள்தொகை இன்னும் மூப்படை யும் என்று எதிர்பார்த்து, அதிகம் நடமாட முடியாமல் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள் ளும் 'பார்கின்சன்ஸ்' நோயாளி களுக்கு ஆதரவு வழங்க மருத் துவ, சமூக சேவைகளை மேம்படுத் துவது அவசியம்.
தேசிய நரம்பியல் கழக நரம்பியல் துறையின் மூத்த தாதியர் இவோன் சியூ (இடது), இல்லப் பராமரிப்புத் திட்டத்தின்கீழ் 'பார்கின்சன்ஸ்' நோயாளியின் குடும்பத்தாருக்கு ஆலோசனை கூறுகிறார். என்டியுசி ஹெல்த் சமூக நிறுவனத் தாதியான வசந்தா கிருஷ்ணன் (நடுவில்), அதை உன்னிப்புடன் கவனிக்கிறார். படம்: தேசிய நரம்பியல் கழகம்